என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 9 மே, 2014

VGK 17 - சூ ழ் நி லை


இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 15.05.2014
வியாழக்கிழமை 

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 17

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:


சூ ழ் நி லை



[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

காலை 10 மணி. பிஸினஸ் விஷயமாக சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின் செல்போன் சிணுங்கியது.

”குட்மார்னிங்... ஜெயா... சொல்லு”  என்றார் டெல்லியிலிருந்து பேசும் தன் ஒரே அன்பு மகளிடம்.

ஜெயாவுக்கு குரல் தடுமாறியது. அவள் அழுது கொண்டே பேசுவது இவருக்குப் புரிந்தது.


“அப்பா... தாத்தா சென்னையில் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டாராம். இப்போது தான் போன் வந்தது. அவரின் உடல் ‘ஜி.ஹெச்’ இல் உள்ளதாம்................



அம்மா ரொம்பவும் அழுது புலம்பிண்டு இருக்கா. ஈவினிங் ஃப்ளைட்டில் அம்மாவை ஏற்றி அனுப்பட்டுமா?” என்றாள்.

இதைக்கேட்ட மஹாலிங்கம் சற்று பலமாகச் சிரித்துக் கொண்டே, “அப்படியாம்மா, ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா. நான் அவசியம் போய்ப் பார்த்துட்டு, அப்புறம் உனக்கு போன் செய்கிறேன்” என்றார், சற்றும் தன் முகபாவணையில் வருத்தமோ அதிர்ச்சியோ ஏதும் இல்லாமல் ....... படு குஷியாக.



தன் அப்பாவின் இத்தகைய பேச்சு ஜெயாவுக்கு அதிர்ச்சியை அளித்தது. தன் தாயாரிடம் இந்த டெலிபோன் உரையாடலைப் பக்குவமாக எடுத்துச் சொன்னாள்.

இதைக் கேள்விப்பட்ட மஹாலிங்கத்தின் மனைவி ஈஸ்வரிக்கு தன் கணவன் மீது கோபம் கோபமாக வந்தது.

“கோடீஸ்வரரான இவருக்கு எப்போதுமே எங்க பிறந்த வீட்டு மனுஷ்யாளைக் கண்டாலே ஒரு வித இளக்காரம் தான். மாமனாரின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்ட பிறகாவது ஒரு மனிதாபிமானத்துடன் பேச மாட்டாரோ! அவ்வளவு பணத்திமிரு ...... இருக்கட்டும் நேரில் போய் பேசிக் கொள்கிறேன்” என்று தன் மகளிடம் கூறிவிட்டு, விமான டிக்கெட் பதிவு செய்ய ஏற்பாடுகளைக் கவனிக்கலானாள்.

மாமனாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட மஹாலிங்கம், தன் தந்தை இறந்த துக்கத்தில் மூழ்கியிருக்கும் ஈஸ்வரியுடன் அதிகமாக மனம் விட்டு பேச முடியாமல் போனது. 

அகால மரணம் ஒன்று எதிர்பாராமல் நடந்து விட்ட அந்த வீடு இருக்கும் சூழ்நிலையிலும், பெரியவரின் மறைவால் அந்த வீட்டில் குழுமியிருக்கும் மனிதர்களின் துக்கமான மன நிலையிலும், எப்படி அவர்கள் மனம் விட்டு பேச முடியும் ?

ஈஸ்வரி ஒரு மூன்று வாரங்களாவது இங்கேயே (பிறந்த வீட்டிலேயே) இருந்து விட்டு, பிறகு டெல்லிக்கு புறப்பட்டு வரட்டும் என்று தன் மாமியாருக்கும் மனைவிக்கும் பொதுவாக காதில் விழுமாறு சொல்லி விட்டு, தான் மட்டும் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

 

பெரிய பிஸினஸ் மேனாக இருப்பதால் அவரால் எந்த வீட்டிலும், எந்த ஊரிலும், எந்த நாட்டிலும், ரொம்ப நேரம் தங்க முடியாது. 

துக்க வீட்டுக்கு வந்து விட்டு ’போய் விட்டு வருகிறேன்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடாது. அதனால் டக்கென்று மஹாலிங்கம் புறப்பட்டு விட்டார். 

அவர் எப்போதுமே இப்படித்தான் என்று தெரிந்த ஈஸ்வரியும், அவர் மேல் இப்போது உள்ள கோபத்தில், அவருடன் முகம் கொடுத்தே பேசவில்லை.

இதற்கிடையில் தன் கணவனை இழந்த துக்கத்தையும் மறந்து, தன் பணக்கார மற்றும் மிகவும் பிஸியான மாப்பிள்ளையைப் பற்றி அடிக்கடி பெருமையாகப் பேசி பூரித்துப் போகும் தன் தாயிடமே கோபமாக வந்தது, ஈஸ்வரிக்கு.

அடுத்த ஒரு மாதமும் கோபத்தில், தன் கணவனுடன் தொலைபேசியில் கூட பேசுவதைத் தவிர்த்து விட்டாள் ஈஸ்வரி ...... அவ்வளவு கோபம் அவர் மீது.

ஒரு மாதம் கழித்து ஒரு வழியாக டெல்லிக்குத் திரும்பினாள் ஈஸ்வரி.

“வா, ஈஸ்வரி” என்று அன்புடன் தான் வரவேற்றார், தற்செயலாக அன்று வீட்டில் இருந்த மஹாலிங்கம். 

அன்புத் தந்தையை இழந்த துக்கத்துடன் திரும்பி வந்துள்ள தன் அம்மாவை ஓடிச்சென்று ஜெயாவும்,  ஆறுதலாக பற்றிக்கொண்டாள்.

தன் வயது வந்த மகள் பக்கத்தில் இருக்கிறாளே என்றும் பாராமல் ஈஸ்வரி கோபமாக தன் கணவனிடம் வாய் சண்டையிட தயாராகி விட்டாள்.

“எங்கப்பா சாலை விபத்திலே செத்துப்போனது உங்களுக்கு ரொம்ப ரொம்ப ஸந்தோஷமா? இது போல நீங்க ஜெயாவிடம் சொன்னது கொஞ்சமாவது நியாயமா? உங்களிடம் எவ்வளவு தான் பணமிருந்தாலும், எங்க அப்பாவை அந்தப் பணத்தால் திரும்ப வரவழைக்க முடியுமா? ” என சுடும் எண்ணெயில் போட்ட அப்பளமாகப் பொரிந்து தள்ளினாள், ஈஸ்வரி.

“வெரி... வெரி... ஸாரி ஈஸ்வரி, இது தான் உன் கோபத்திற்குக் காரணமா? .........

சென்னைக்குப் போன இடத்தில் என் நண்பர் ஒருவர் மூலம், நம்ம ஜெயாவுக்கு எல்லா விதத்திலும் நல்ல ஒரு பொருத்தமான மாப்பிள்ளை பையன் பார்த்து, ஜாதகமும் பொருந்தி, மற்ற எல்லா விஷயங்களும் பேசி முடிக்கும் நேரம், நம் ஜெயாவிடமிருந்து, இந்த துக்கமான தகவல் வந்தது ...... 

நான் அங்கிருந்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், பிள்ளை வீட்டார் ஏதாவது அபசகுனமாக நினைக்காமல் இருக்கவும் தான், அவ்வாறு சொல்லும் படியும், சமாளிக்கும் படியும் ஆகி விட்டது .......

என்னிடம் உள்ள பணத்தாலும், செல்வாக்காலும் அவரின் உயிரைத் திரும்ப கொண்டு வர முடியாவிட்டாலும், அவருடைய உடலையாவது வெகு சீக்கரமாக ”ஜி.ஹெச்” லிருந்து வீட்டுக்குக் கொண்டு வர முடிந்தது .......

மேற்கொண்டு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளின் எல்லாச் செலவுகளுமே என்னுடையதாக இருக்கட்டும் என்று சொல்லி, உன் அம்மாவிடம் நிறைய பணமும் கொடுத்து வர முடிந்தது ......

இந்தப் பணம் கொடுத்த விஷயம் மட்டும் உன்னிடமோ, வேறு யாரிடமுமோ சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றும் அவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன் .......

எனக்கும் என் மாமனாரின் இந்த எதிர்பாராத விபத்திலும் மரணத்திலும் மிகவும் வருத்தம் தான். அவரின் விதி அது போல உள்ளபோது நம்மால் என்ன செய்ய முடியும்? ......

அமரரான உன் அப்பா ஆசீர்வாதத்தால் தான், இந்த ஒரு நல்ல இடம் கை கூடி வந்து, நம் ஜெயாவின் கல்யாணம் நல்லபடியாக ஜாம் ஜாம்ன்னு சீக்கிரம் முடியணும்!” என்று சொல்லி, தன் மனைவியின் கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டார் மஹாலிங்கம்.

தன் கணவனின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவரின் சமயோஜிதச் செயலையும், தனக்கே கூடத் தெரியாமல் தன் குடும்பத்திற்கு, அவர் தக்க நேரத்தில் செய்துள்ள பல்வேறு உதவிகளையும் நினைத்து மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள் ஈஸ்வரி.

அவரின் சூழ்நிலை தெரியாமல் அவசரப்பட்டு ஏதேதோ வார்த்தைகளைக் கொட்டி விட்டோமே என வருந்தி, அவர் மீது சாய்ந்த வண்ணம் கண்ணீர் சிந்தினாள், ஈஸ்வரி.


தாத்தாவின் திடீர் மரணம், ஒரு விதத்தில் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள், மணப்பெண் ஜெயா.

  

oooooOooooo





'VGK-15 அழைப்பு’ என்ற சிறுகதைக்கு 
பலரும் அழகாக விமர்சனம் 
எழுதி அனுப்பி சிறப்பித்திருந்தார்கள். 

அவர்கள் அனைவருக்கும் என் 
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

 


 

 

  

 


ஒருசில தவிர்க்க இயலாத காரணங்களால் 
’VGK-15 - அழைப்பு’ சிறுகதைக்கான 
விமர்சனப்போட்டியின் பரிசு முடிவுகள் 
வழக்கம்போல் நாளைய தினம் வெளியிட முடியாத 
சூ ழ் நி லை 
ஏற்பட்டுள்ளது.  


 VGK-15, VGK-16, VGK-17 
ஆகிய சிறுகதைகளின் 
விமர்சனப்போட்டி முடிவுகள் மட்டும் 
வெளியிடுவதில் தற்சமயம் 
சற்றே தாமதமாகும் போலத் தோன்றினாலும், 
இந்த ’மே’ மாத இறுதிக்குள் 
அடுத்தடுத்து தினசரிப்பதிவுகள் மூலம்
அனைத்து முடிவுகளும் 
வெளியிடப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறேன்.


  
**Expected Schedule for Result Announcements**
[** Subject to slight changes** ]

 For VGK 15   அழைப்பு 

  24th and 25th May, 2014 Saturday / Sunday

 For VGK 16   ஜாதிப்பூ  

  26th and 27th May, 2014 Monday / Tuesday 
             
 For VGK 17   சூழ்நிலை 

  28th and 29th May, 2014 Wednesday / Thursday

For VGK 18 
  As usual 
On Saturday 31.05.2014 
and 
Sunday 01.06.2014

 

போட்டிக்கான கதைகள் மட்டும் வழக்கம்போல 
வெள்ளிக்கிழமை தோறும் வெளியிடப்படும். 




தொடர்ந்து அனைவரும் 
அனைத்துப்போட்டிகளிலும் 
கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  





என்றும் அன்புடன் தங்கள்
கோபு [VGK]



29 கருத்துகள்:

  1. நல்ல கதை ஐயா...

    அறியாமல் இருந்தாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிட கூடாது...

    பதிலளிநீக்கு
  2. சூ ழ் நி லை யை சமயோசிதமாக சமாளித்து வெற்றி காணும்
    சிறப்பான கதைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. கமென்ட் போச்சானு தெரியலை. :)

    பதிலளிநீக்கு
  4. முன்னால் கொடுத்தது போகலை போல!. உங்கள் உடல் நிலையிலும் கவனம் வைக்கவும். கண் அறுவை சிகிச்சை முடிந்து விட்டதா? கவனமாக இருக்கவும். உடல்நிலையைப்பார்த்துக் கொண்டு இணையத்துக்கு வரவும். உங்கள் உடல் நலத்துக்குப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. பல சமயங்களில் சூழ்நிலை தெரியாது அடுத்தவர்கள் மீது கோபப்பட்டு விடுகிறோம். புரிந்த பின் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம் தெரிகிறது....

    சிறப்பான கதை. போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. சிறுகதை சிறப்பாக இருக்கிறது. எந்த நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு என்பதை உங்கள் சிறுகதை உணர்த்துகிறது. இழப்பு என்பது நேர்ந்து விட்டாலும் அந்த இழப்பை அடைந்தவர்களுக்கு எந்த விதத்தில் உதவலாம், எப்படி ஆறுதல் தரலாம் என்று யோசித்து உதவ நல்ல மனம் வேண்டும். துயரங்களிடையே கை கொடுக்கும் ஒரு நல்ல மனதுக்குரியவரைப்பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  7. சும்மா இருப்பவர்கள்
    சும்மா ஒரு ஜாலியா
    ‘சும்மா’ என்ற வலைத்தளத்திற்கு
    சும்மா ஒரு ரெளண்டு போயிட்டு வாங்கோ.

    கவிதாயினி திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்
    அவர்கள் தங்களை அன்புடன் அழைக்கிறார்கள்.

    இணைப்பு இதோ:

    http://honeylaksh.blogspot.in/2014/05/blog-post_10.html

    தலைப்பு:

    சாட்டர்டே ஜாலிகார்னர்

    அன்புடன் கோபு


    பதிலளிநீக்கு
  8. ஸம யோசிதமாக, பதில் சொல்லி, தக்க ஸமயத்தில் அவர்களுக்குதவிய மாப்பிள்ளை,பாராட்டப்பட வேண்டியவர்தான்.
    அட்வடைஸ்மென்டும் இல்லை. நல்ல கதைய

    பதிலளிநீக்கு
  9. கதை- சிறு கதைதான்!
    எனினும் சிறப்பான கருதான்!!

    பதிலளிநீக்கு
  10. கதை சிறிதானாலும் காரமானது. வார்த்தைகளை அளந்து பேசவேண்டும் என்பார்கள். திடீரெனக் கொட்டுகின்ற சொற்கள் மனதைப் புண்படுத்தும். சிந்தித்தே சொற்களை சிதற விடவேண்டும்

    பதிலளிநீக்கு
  11. சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொண்ட மாப்பிள்ளை வெகு புத்திசாலி. ஆனாலும் அழும் பெண்ணுக்கு,பிறகாவது ஆறுதல் சொல்லி இருக்கலாம். வித்தியாசமான கதை.

    பதிலளிநீக்கு
  12. போட்டியில் வெற்றிபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    அழகிய கதை, ஆரம்பம் கொஞ்சம் கவலைபோல இருந்து முடிவு நல்லதாகி விட்டது.

    வளைகாப்பு படமெல்லாம் போட்டிருக்கிறீங்க ஆருக்கு?:).. நீண்ட இடைவேளையின் பின்பு கால் எடுத்து வைத்திருப்பதால் எதுவும் புரியுதில்ல்:).

    பதிலளிநீக்கு
  13. மிக அருமையான கதையும் புகைப்படங்களும். சாவியின் வாஷிங்டன் திருமணத்தை நினைவு படுத்தின புகைப்படங்கள்.

    உங்களுக்கு கண் அறுவை சிகிச்சையா சொல்லவே இல்லையே சார்

    நான் வேறு தொந்தரவு கொடுத்து விட்டேன். அன்புத் தொல்லைக்கு மன்னிக்கவும்.

    சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.

    என் வலைப்பூ முகவரி அளித்துள்ளமைக்கும் நன்றிகள்.

    போட்டியில் வெற்றிபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் :)

    பதிலளிநீக்கு
  14. அவரவர்கள் எந்த சூழ் நிலையில் இருக்கிறார்கள்
    என அறியாது அவர்கள் பேசியதை வைத்தே
    சட்டென ஒரு முடிவுக்கு வருவது
    எத்தனை தவறு என்பதை உணரச் செய்யும்
    அருமையான கதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. அருமையான கதை. சூழ்நிலை காரணமாய் பேசும் பேச்சுக்களை பொருட்படுத்தக் கூடாது என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  16. இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு: http://gperumal74.blogspot.in/2014/05/blog-post_26.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  17. இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திரு. ரமணி அவர்கள், தான் எழுதி அனுப்பியிருந்த விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில், தனிப்பதிவாக வித்யாசமான முறையில், மாற்றுச்சிந்தனையுடன் மிக அழகாக எழுதி வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு: http://yaathoramani.blogspot.in/2014/05/blog-post_8735.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  18. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    இந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://muhilneel.blogspot.com/2014/10/blog-post_23.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  19. சமயோசிதமாக நடந்து கொள்வது எல்லோராலும் முடியாது.

    பதிலளிநீக்கு
  20. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014' - VGK-17 சூழ்நிலை

    இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று [09.08.2015] அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:
    http://swamysmusings.blogspot.com/2015/08/blog-post_9.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  21. நல்ல கதை சூழ்நிலை காரணமாய் பேசும் பேச்சுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாதுதான்.

    பதிலளிநீக்கு
  22. நல்ல சிறுகதை. நிறைய விஷயங்கள் நமக்கு லேட்டாதான் புரியும். புரிஞ்சா சரி.

    பரிசு பெறப்போகும் அதிர்ஷ்டசாலி விமர்சகர்களுக்கு அட்வான்ஸ் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 29, 2015 at 3:09 PM

      //நல்ல சிறுகதை.//

      மிக்க மகிழ்ச்சி.

      //நிறைய விஷயங்கள் நமக்கு லேட்டாதான் புரியும். புரிஞ்சா சரி.//

      எனக்கு இப்போப் புரிந்து விட்டது ஜெயா. கதையின் கடைசி வரிகளில் உள்ள கடைசி இரண்டு வார்த்தைகளை மீண்டும் பாருங்கோ, ப்ளீஸ் :)))))

      //பரிசு பெறப்போகும் அதிர்ஷ்டசாலி விமர்சகர்களுக்கு அட்வான்ஸ் நல் வாழ்த்துக்கள்.//

      :)

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  23. நல்ல கத தா. மத்தவங்க என்ன நெலமயில இருப்பாங்களோன்னு நெனக்கணும்ல. சும் ம நமக்குதா பேசவருமுனுட்டு வார்த்த வுட்டுட படாது.

    பதிலளிநீக்கு
  24. சிலசமயங்களில் அனைவருமே சூழ்நிலை கைதிகள் ஆகிவிடுகிறோம். மற்றவர்களுக்கு அது தெரியாதே அதுதான் வார்த்தையை அள்ளிவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  25. மிகக் கடினமான சூழ்நிலையிலும் முகத்தில் உணர்ச்சிகள் பிரதிபலிக்காமல் எப்படி எதிர்கொள்ள வேண்டும்....அதே நேரத்தில் எதிரிலிருக்கும் மனிதனின் சூழ்நிலையை உணராது கோபம்கொண்டுவிடக்கூடாது..இப்படியாக பல விஷயங்களை அறிவுறுத்தும் சூழ்நிலைக்கதை...அருமை..

    பதிலளிநீக்கு
  26. இன்றைய அவசர உலகில், பிஸினஸ் நிமித்தமாய் பயணத்திலேயே பாதி நாட்களைக் கழிக்க நேர்ந்திடும் கணவனுக்கும், குடும்பத்தைப் பராமரித்துக் காக்கும் மனைவிக்கும் இடையே, மனம் விட்டுப் பேச முடியாமற் போவதால் ஏற்படும் புரிதல் குறைபாடுகளை விளக்கும் வண்ணம் இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகையில் அவர்களிடையேயான அன்பு வலுப்பெறுகிறது.
    றவும் பகைபோல் தெரியும், அது உண்மை விளங்கிடத் தெளியும் என்பதை
    கதைக்கு அருமையான சூழ்நிலையைக் கருவாக எடுத்துக் கையாண்டு, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலையை கடைசியில் ஏற்படுத்தி மனைவிக்கு தன் கணவன் மிகச் சிறந்தவந்தான் எனும் தெளிவை ஏற்படுத்தி முடித்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  27. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 33 + 26 = 59

    அதற்கான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_17.html

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_5686.html

    பதிலளிநீக்கு
  28. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17-01-03-first-prize-winners_27.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17-02-03-second-prize-winners_26.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html


    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு